காசி கழற்றிவிடும் பெண்களை தன் வலையில் வீழ்த்திய அவன் நண்பனான வசதிபடைத்த தினேஷ்! அதிர்ச்சி தகவல்!!

742

பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் புதிய திருப்பமாக அவரின் மற்றொரு நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவிலை சேர்ந்த 26 வயதான காசி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான்.

பொலிசார் விசாரணையில் பெண்களை மோசடி செய்ததில் காசிக்கு மட்டுமின்றி அவரது நண்பர்களுக்கும் தொடர்பிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் டேசன் ஜினோ என்ற நண்பர் கைதானார்.வெளிநாட்டில் வசிக்கும் கெளதம் என்ற நண்பருக்கு லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

காசி வழக்கு சிபிசிஐடி கையில் சென்றதும், காசி மற்றும் அவரது நண்பர் ஜினோவை அழைத்துக் கொண்டு காசியின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தியதில் 3 செல்போன்கள், ஒரு மெம்மரி கார்டு ஆகியவை கிடைத்தன. அதனை தொடர்ந்து, காசி அளித்த தகவலின் பெயரில் கணபதிபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வசதியான குடும்பத்தை சேர்ந்த தினேஷிடம், காசி தான் கழற்றி விட நினைக்கும் பெண்களின் எண்களை கொடுத்து விடுவார். அந்த பெண்களிடம் காசி குறித்து எதாவது கூறி காசியிடம் பெண்களை விலக்கி வைப்பது தான் தினேஷின் வேலை. ஆனால் காசியை போல தானும் முயற்சி செய்தால் என்ன என தினேஷ் திட்டமிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து காசியால் புறக்கணிக்கப்பட்ட பெண்களை தினேஷ் தனியாக சந்தித்து காசி குறித்து பல தகவல்களை கூறி அந்த பெண்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் தினேஷ். இதனை பயன்படுத்தி சில பெண்களுடன் தனியாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி காசி வழியில் தினேஷும் சில பெண்களை மிரட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினேஷை பொலிசார் கைது செய்த நிலையில், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசியில் பல ஆபாச படங்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here