காதலனை நம்பிச் சென்ற காதலி.. நண்பனோடு சேர்ந்து காதலன் செய்த கொடூரம்!!

518

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தம். இவர் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதலர்கள் இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு மருத்து மாணவியின் செல்போனுடன் புருஷோத்தம் பெங்களூருவிற்கு சென்று விட்டார். அதன்பிறகு மற்றொரு செல்போனில் தொடர்புகொண்டு, மாணவி தனது செல்போனை கேட்டுள்ளார்.

அதற்கு பெங்களூரு வந்து வாங்கிச் செல்லுமாறு புருஷோத்தம் கூறியுள்ளார். இதையடுத்து மருத்துவக்கல்லூரி மாணவியும் நேற்று முன்தினம் பெங்களூரு வந்து மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் காதலன் புருஷோத்தமை சந்தித்தார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அங்கு செல்போனை ஒப்படைத்த புருஷோத்தன் சிறிது வெளியே செல்லலாம் என காதலியான மருத்துவ மாணவியை கூட்டிச்சென்றார். கிரிநகரில் உள்ள தனது நண்பர் சேத்தன் என்பவர் வீட்டிற்கு மாணவியை புருஷோத்தம் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு வீட்டின் தனி அறையில் வைத்து மாணவியை புருஷோத்தம் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது மாணவி சத்தம்போட்டு அலறியுள்ளார். இளம்பெண்ணின் சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில்ல அங்கு விரைந்த போலீசார், மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புருஷோத்தம், சேத்தன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்தனும் காதலனின் சம்மதத்துடன் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது வெளியாகி பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.