தமிழகத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு தெரியவர அவர்கள் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர்.
இதனால் ஐஸ்வர்யா ரதீஸிடம் பேசுவதை தவிர்த்துள்ளார், இதில் கோபமடைந்த ரதீஸ் ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு வந்து தன்மை மீண்டும் காதலிக்குமாறு கூறியுள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இதில் நடந்த வாக்குவாதத்தில், மாணவி மறுக்கவே, மறைத்து வைத்திருந்த கத்தியால், ஐஸ்வர்யாவை குத்தி விட்டு தப்பியுள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரின் தந்தைக்கும் இரு கைகளில் கத்தி குத்து விழுந்துள்ளது.
படுகாயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா உயிரிழந்தார்.
இதனிடையே வழக்குப்பதிவு செய்த பேரூர் காவல்துறையினர் தப்பியோடிய ரதீஸை தேடி வருகின்றனர்.