காதலியை குக்கரால் அடித்து கொலை செய்த காதலன்.. தொடரும் லிவிங் டு கெதர் சீரழிவு!!

294

இந்தியாவில்..

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர் தேவா. இவருடன் படித்தவர் வைஷ்ணவ். வைஷ்ணவ் கொல்லத்தில் வசித்து வருபவர். இருவரும் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே காதலித்து வந்தனர். இருவருக்கும் பெங்களூரில் வேலைகிடைத்து சென்று விட்டனர்.

பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து இருவரும் லிவிங் டு கெதரில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் இருவரும் லிவ் இன் பார்ட்னர்களாக இருந்து வந்த நிலையில், இவர்களுக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வருவது சகஜமாக இருந்து வந்தது.

இந்நிலையில், திடீரென நேற்று இவர்களது குடியிருப்பில் எந்த சத்தமும், ஆள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. சந்தேகத்தின் பேரில் உடனடியாக குடியிருப்புவாசிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது உள்ளே தேவா சடலமாக கிடந்தார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரிடம் வைஷ்ணவ் குறித்து விசாரித்தபோது அவர் தலைமறைவாகியிருந்தது தெரியவந்தது. தனிப்படை அமைத்து அவரை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தேவாவை வைஷ்ணவ் குக்கரால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ” கடந்த சில நாட்களாகவே வைஷ்ணவிற்கு தேவா மீது சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.

ஆகஸ்ட் 27ம் தேதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை குக்கரால் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். அதில் தேவா ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . எதிர்பாராத இந்த செயலால் திடுக்கிட்ட வைஷ்ணவ் தலைமறைவாகியிருந்தார்” எனக் கூறியுள்ளார்.