காதலியை முதலாளிக்கு விருந்தாக்க நினைத்த காதலன் : இறுதியில் நடந்த சோகம்!!

52705

மகாராஷ்டிரா..

மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த 24 வயதான ரெஹான் சர்தார். அஜ்சத் டாபரே என்ற கட்டிட காண்டிராக்டரிடம் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இதனிடையே 20 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், தனக்கு திருமணமானதை மறைத்து பழகி வந்துள்ளார்.

இளம்பெண்ணும் சர்தாரும் கடந்த 13ஆம் தேதி ராஜோடி கடற்கரைக்கு சென்றுள்ளனர். இருவரையும் புகைப்படம் எடுப்பதற்காக சர்தாரின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணமானது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சர்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன், உறவை துண்டித்துக்கொள்வதாக தெரிவித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆனால், இளம்பெண்ணை சந்திக்க வேண்டும் என்று சர்தார் டார்ச்சர் செய்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

அவர் வர மறுக்கவே இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் சர்தாரை ஆகஸ்ட் 15ஆம் தேதி நலசோபராவிலுள்ள ஒரு லாட்ஜில் சந்தித்துள்ளார்.

அப்போது இளம்பெண் அங்கிருந்த தண்ணீரை எடுத்து பருகியதும் அவருக்கு கடுமையான தூக்கம் வந்துள்ளது. மயங்கி சரிந்த நேரத்தில் இளம்பெண்ணை சர்தார் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துகொண்டார். கண் விழித்துப் பார்த்ததும்தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் அப்பெண்ணுக்கு தெரியவந்தது.

அதுவரை அம்பியாக இருந்த காதலன், அதன்பிறகு அன்னியனாக மாறி இளம்பெண்ணை மிரட்ட ஆரம்பித்தான். மேலும், தனது கட்டட தொழில் முதலாளி அஜ்சத் டாபரேவுடன் ஒரு இரவு தங்கியிருந்தால் மட்டுமே ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலிட் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்துபோன இளம்பெண் வீட்டிற்கு வந்து சோகமாகவே இருந்துள்ளார். மகள் பயந்துபோய் இருப்பதை கண்டறிந்த தாய், அவரிடம் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக காவல்துறையிடம் இளம்பெண் தரப்பு புகார் அளித்தது.

அதன் பேரில் சர்தாரை கைது செய்த காவல் துறையினர், அவரை தனியார் வாகனம் ஒன்றில் அழைத்துச் சென்றனர். இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக போலீஸ் செயல்படுவதாக அங்குள்ள சமூக ஆர்வலர் குற்றம்சாட்டினார். ஆனால், வாகன பற்றாக்குறை காரணமாகவே தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் விளக்கம் அளித்தனர்.