குட்ட கவுன்ல ரசிகர்களின் கண்ணுக்கு குளுகுளு போஸ் கொடுத்த கேப்ரியல்லா!!

109

கேப்ரியல்லா..

விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்களில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறுமியாக இருக்கும்போதே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். விஜய் டிவியில் பல நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 3 உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். 102 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தும் திடீரென ஒரு நாள் 5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பது கேப்ரியல்லாவின் ஆசை. விஜய் டிவியிலிருந்து போன சிவகார்த்திகேயனுக்கும் தூதுவிட்டார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எனவே, சீரியல் பக்கம் போகலாம் என முடிவெடுத்து ராஜா ராணி சீசன் 2 தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன்பின் ஈரமான ரோஜாவே சீசன் 2 தொடரில் நடித்தார்.


இதன் மூலம் சீரியல் ரசிகைகளிடம் பிரபலமானார். ஒருபக்கம், எப்படியாவது திரைப்படங்களில் வாய்ப்பை பெறுவதற்காக அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் குட்டகவுன் அணிந்து கடற்கரையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்ளை ஜில்லாக்கியுள்ளது.