கேளிக்கைப் பூங்காவில் விபத்து… வாட்டர் ரைட் சென்ற இளம்பெண் மரணம்!!

91

தாய்லாந்து நாட்டில் புக்கட் தீவில் உள்ள கேளிக்கைப் பூங்கா ஒன்றில் நீர் சவாரி சென்ற கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் என்ற இடத்தில் வாட்டர் சவாரி செய்ததில் கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த நிம்மி என்கிற லவீனா(28) உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து செப்டம்பர் 4ம் தேதியன்று நடந்த நிலையில், விபத்தில் மயக்கமடைந்த நிம்மி, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சைக்காக அவளை கேரளாவுக்கு அழைத்து செல்ல மாற்றும் திட்டம் இருந்த போது நிம்மி சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

லவீனா மற்றும் அவரது குடும்பத்தினர் சிங்கப்பூரில் வசிக்கின்றனர். அவர் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பாங்காக்கிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.