கொரோனாவால் சினிமாவை விட்டு மளிகை கடை திறந்த முக்கிய இயக்குனர்!

726

கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 3.95 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஊரடங்கு நீடித்து வருவதால் அனைத்து தொழில்களும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சினிமாவும் முற்றிலும் முடங்கியுள்ளது.

திரைப்பட கலைஞர்கள் பலரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மவுன மழை, ஒரு மழை நான்கு சாரல், பாரதபுரம், நானும் பேய் தான் ஆகிய படங்களை இயக்கியவர் பி ஆனந்த். அடுத்ததாக அவரின் நானும் பேய் தான் படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.

இவர் தற்போது சென்னை முகலிவாக்கத்தில் மளிகைக்கடை ஒன்றை திறந்து நடத்தி வருகிறாராம். இது குறித்து அவர் கூறுகையில் 5 படங்களை இயக்கியிருக்கும் நான் கொரோனாவால் மக்கள் சந்திக்கும் துன்பங்களை கண்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அதனால் இக்கடை திறந்து குறைவான விலையில் தரமான பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். துணிந்து செய் படத்தை தற்போது இயக்கி வருகிறேன் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here