கொரோனாவை வெற்றி கண்ட இலங்கைக்கு தடை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்!!

833

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றில் வெற்றி பெற்றதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கள் நுழைய அனுமதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையின் பெயரை உள்ளடக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் ஐரோப்பிய சங்கம், உலகின் 54 நாடுகளுக்கு மக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதுவரையில் உலகின் பாரிய கொரோனா நோயாளர்கள் உள்ள இந்தியா உட்பட அந்த 54 நாடுகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அந்த பட்டியலில் உள்ளடகப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

பூட்டான், கோஸ்டாரிக்கா, நெம்பியா, ருவண்டா, டொமினிக், முருசி, கியூபா, உகாண்டா, எத்தியோப்பியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படாத நிலையில் இலங்கையும் அதில் உள்ளடக்கப்படாமை குறிப்பிடத்தக்க விடயமாகியுள்ளது.