கோமாவில் இருந்து சுயநினைவுக்கு திரும்பிய நபருக்கு வந்த வீடியோ அழைப்பு! அதில் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

741

அயர்லாந்தில் மகன் கோமாவில் இருந்த சமயத்தில் தாயார் உயிரிழந்த நிலையில் நினைவு திரும்பிய மகனுக்கு அந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Ian O’Sullivan என்ற நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் போது கோமா நிலைக்கு சென்றார். அந்த நேரத்தில் அவரின் 83 வயது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்பின்னர் கோமாவில் இருந்து Ian O’Sullivan மீண்டு சுயநினைவை பெற்றார்.

இதன்பின்னரே தாயார் இறந்த தகவல் அவருக்கு கூறப்பட்டது, இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் Ian O’Sullivan.

அவர் கூறுகையில், என் தாய் மீது நானும், என் மீதும் அவரும் மிகுந்த அன்பு வைத்திருந்தோம்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

தாயாருக்கு இறுதிச்சடங்கு கூட என்னால் செய்ய முடியவில்லை, அவர் இறந்து 4 நாட்கள் கழித்தே எனக்கு சுயநினைவு வந்தது.

அதன்பின்னர் மருத்துவர்கள் எனக்கு வீடியோ அழைப்பு வந்துள்ளதாக கூறி செல்போனை கொடுத்தனர், அதில் பேசிய என் சகோதரி நமது தாயார் இறந்துவிட்டார் என கூறியது எனக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் கொடுத்தது.

கடைசியாக அவர் முகத்தை பார்க்கமுடியவில்லையே என நினைக்கும் போது வேதனையளிக்கிறது என கூறியுள்ளார்.