சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி பொலிசார் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி பொலிசார் 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்ட்டார். இதையடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரையும் சிபிசிஐடி பொலிசார் கைது செய்தனர்.
எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டதை சாத்தான்குளம் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை மகன் லாக்அப் மரணம் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.
அவர் மீது ஐபிசி பிரிவு 302 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5 காவல்துறை அதிகாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.