சீன எல்லைக்குள் நுழைந்து பேயாட்டம் ஆடிய இந்திய ராணுவம்..! 3 நாட்களில் 300 சீன வீரர்களை கொன்று குவித்த வீரியம்..!

980

இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் நிலை ஏற்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைக்கு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ள நிலையில் 1967ல் நடைபெற்ற போரில் சீன ராணுவத்தினர் 300 பேர் உயிரிழந்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

இந்திய, சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தமிழக ராணுவ வீரர் பழனி மற்றும் ராணுவ அதிகாரி உள்பட 20 இந்திய வீரர்கள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதேபோல் சீன தரப்பிலும் சுமார் 50 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1967-ம் ஆண்டு சிக்கிம் மற்றும் சீனாவின் திபெத் எல்லையில் உள்ள நாதுலா கணவாயில் இடையே நடந்த மோதலில் 300 சீன ராணுவத்தினரும், 65 இந்திய ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர்.

1962ஆம் நடைபெற்ற போருக்குப் பின்னால் இந்திய சீன நாடுகள் தங்களது தூதர்களைத் திரும்ப பெற்றுக் கொண்டன. இந்நிலையில் இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் நாட்டை உளவு பார்ப்பதாக சீனா குற்றச்சாட்டு கூறியிருந்தது. மேலும் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தை முடக்கிய சீன காவல்துறையினர் யாரையும் உள்ளே செல்லக்கூடாது என உத்தரவிட்டது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் சீன தூதரகத்தை இதே போல முடக்கியது.


தூதரக பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே தங்கள் நாட்டு எல்லையில் இருருந்து 800 ஆடுகளை இந்திய ராணுவத்தினர் திருடிச் சென்றதாக சீனா மீண்டும் ஒரு குற்றச்சாட்டு வைத்தது. 1965-ல் நடந்த இந்திய- பாகிஸ்தான் போரில் இந்தியாவின் பலம் அதிகமாக இருந்தது. இதனால் சீனாவுக்கு ரகசியமாக சென்ற பாகிஸ்தான் பிரதமர் அயூப் கான் தங்களுக்கு உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியானது. பின்னர் பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக இந்தியா மீது சீனா பல அழுத்தங்களைக் கொடுக்க துவங்கியது. அதாவது சிக்கிம் எல்லையில் உள்ள எல்லை கண்காணிப்பு மையங்களை இந்தியா அகற்ற வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

1967-ல் செப்டம்பரில் எல்லையில் இரும்பு வேலிகளை அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தினர் தொடங்கினர். அதற்கு சீன ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சீன ராணுவத்தினர் திடீரென இந்திய ராணுவத்தினரை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இந்தி ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் சுமார் 300 சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா – சீனா இடையே 1962 போரில், 740 சீன ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 1967ல் நடைபெற்ற போரில் 300 துருப்புகளைச் சீன ராணுவம் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.