சீன நாட்டு படையினருடனான மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழப்பு.!!.

930

லடாக் கல்வான் எல்லைப் பகுதியில் சீன படையினருடன் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன படையினருடனான மோதலில் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்ததாக இந்திய இராணுவம் நேற்று அறிவித்திருந்தது.

இந்தநிலையில், மோதலில் படுகாயமடைந்த 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய இராணுவம் பின்னர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.


அதற்கமைய இந்த மோதலில் குறைந்தது 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் இந்த மோதலில் சீன தரப்பில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோா் எண்ணிக்கை 43 என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா-சீனா மோதலில் 45 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய இராணுவ வீரா்கள் உயிரிழந்துள்ளனர். முன்னதாக கடந்த 1975-ஆம் ஆண்டு இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரா்கள் 4 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், சுமார் 5 தசாப்தங்களின் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற பாரிய மோதலாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.