நாய் ஒன்று சூரிய ஒளியை சாப்பிட முயற்சிக்கும் காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்டீபன் என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நாய் ஒன்று சூரிய ஒளியை சாப்பிட முயற்சி செய்கின்றது.
சுமார் 10 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், நாய் ஒன்று சூரிய வெளிச்சம் படும் இடத்தில் படுத்துள்ளது, அப்போது அந்த இடத்தில் படும் சூரிய ஒளியை நாய் சாப்பிட முயற்சி செய்கின்றது.
தனது கால்கள் மீதும் சூரிய ஒளி படும் நிலையில் தனது கால்களையும் அந்த நாய் கடிக்க முயல்கின்றது.
Toni discovered sunshine today. And then she tried to eat it. There’s a metaphor in there somewhere pic.twitter.com/njPKxUZhTl
— stefan • (@stefanbertin) July 20, 2020
“டோனி என பெயரிடப்பட்ட தனது 8 மாத நாய் இன்று சூரிய ஒளியைக் கண்டுபிடித்தார், பின்னர் அவள் அதை சாப்பிட முயன்றாள்” என்று வீடியோவைப் பகிரும்போது ஸ்டீபன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.