செருப்பால் வெளுத்து வாங்கிய சம்பவம்!! மருத்துவமனையில் 40 வயது பெண்ணிடம் இளைஞர் செய்த சேட்டை!

293

சமீபகாலமாக பாலியல் சீண்டல் அதிகமாகி வருகிறது. ஊரடங்கு நேரத்தில் பொது இடங்களில் பாலியல் சீண்டல்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் சற்று குறைவானது. தற்போது மக்கள் தளர்வு கொடுக்கப்பட்ட ஊரடங்கை விட்டு வெளியே வர தொடங்கிவிட்டதால் பொது இடங்களில் பாலியல் சீண்டல் அதிகமாகிவிட்டது.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் என மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும்.

மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே உள்ள சிகிச்சை மற்றும் செக் அப் செய்வதற்காக பலர் வந்துள்ளனர். அங்கு 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவரிடம் வெகு நேரமாக இளைஞர் ஒருவர் சுற்றிக் கொண்டு வளைத்து சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஒருகட்டத்தில் 40 வயது பெண்ணிடம் நெருங்கி அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எரிச்சலடைந்த பெண் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற =இளைஞரை பிடித்துச் செருப்பால் வெளுத்து வாங்கினார். மருத்துவமனையில் இருந்த காவலரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தார். பாலியல் சீண்டலில் ஈடுபட இளைஞரை காவலர்கள் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கண்ணமங்கலம் அடுத்த கம்பம் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. நோயாளிகள் சிகிச்சைக்காகவும், செக் அப் செய்வதற்காக வரும் நோயாளிகளிடம் இப்படி சீண்டலில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது.