தமன்னா..
பாலிவுட்டில் சரியான வாய்ப்பு இல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பக்கம் வந்தவர் தமன்னா. பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். நல்ல கதையாக இருந்தும் அந்த படம் ஓடவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
இடையிடையே சில தமிழ் படங்களிலும் நடித்தார். தமன்னாவின் மில்க் பியூட்டி தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனதால் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்கதுவங்கினார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம் மற்றும் விக்ரம், சூர்யா, ஜெயம்ரவி, தனுஷ் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
தெலுங்கிலும் பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பாகுபலி படத்தில் நடித்த தமன்னா பேன் இண்டியா அளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமானார். ரஜினியுடன் நடிக்காத குறையை ஜெயிலர் படம் மூலம் தீர்த்துக்கொண்டார். இந்த படத்தில் தமன்னா போட்ட குத்தாட்டமே இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
ஒருபக்கம் ஹிந்தி வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளில் தமன்னா காட்டிய தாராளம் ரசிகர்களை அதிர வைத்தது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வைரலானது. ஒருபக்கம், மில்க் பியூட்டியை விதவிதமாக காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அழகான உடையில் சைனிங் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.