சொத்து பிரச்சினையில் அண்ணன் குடும்பம் படுகொலை : தம்பி தலைமறைவு!!

51

சொத்து பிரச்சினை காரணமாக உடன் பிறந்த அண்ணனையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தம்பியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே சொத்து பிரச்சினை காரணமாக அண்ணனையும், அவனது குடும்பத்தினரையும் தம்பி கொலைச் செய்து விட்டு தம்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகே வில்லே பார்ளே பகுதியில் வசித்து வந்தவர் மதன் பாட்டீல் (40). இந்நிலையில், மதன் பாட்டீல் மதன் பாட்டீல், அவரது கர்ப்பிணி மனைவி அனிஷா, மகன் விவேக் (11) என குடும்பத்தினர் அனைவருமே படுகொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தி வந்தனர். அனைவருமே தலையில் பலமாக அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

போலீசாரின் விசாரணையில், “மதன் பாட்டீலுக்கும், அவரது தம்பி ஹனுமந்த் பாட்டீலுக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்துள்ளது தெரிய வந்தது. மதன் பாட்டீல் குடும்ப சொத்தில் தனக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று சொத்தைப் பிரித்து தரச் சொல்லி கேட்டு வந்துள்ளார்.

ஆனால் அவரது தம்பி, சொத்தைப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், மதன் பாட்டீலை அவரது சகோதரர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்றும், மதன்பாட்டீல் குடும்பத்தினரின் படுகொலைக்கு பிறகு அவரது தம்பி தலைமறைவாகி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


சகோதரர்களின் தந்தை, சொந்தமாக ஒரு வீடு கட்டி இரண்டு மகன்களையும் அதில் குடியிருக்கும்படி கூறியிருக்கிறார். அந்த வீட்டு ஆவணங்களில் தனது பெயர் இடம் பெறாததால் ஹனுமந்த் பாட்டீல் இக்கொலையை செய்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.