சோதனை செய்ய வந்த பெண் மருத்துவர் குத்தி கொலை… அரசு பள்ளி ஆசிரியர் வெறிச்செயல்!!

323

கேரளா…..

 

கேரளாவை சேர்ந்தவர் சந்தீப் நெடும்பன் (45). அரசு மேல்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர், வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது இவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை நேற்று இரவு போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக கொட்டாரகரை தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவரை பரிசோதனை செய்ய பெண் மருத்துவர் வந்தனா (25) என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆவேசமான சந்தீப், அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து மருத்துவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் வெறித்தனமாக அவரை குத்தியுள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் மருத்துவர் வந்தனா சரிந்து கீழே விழுந்தார். இதனை கண்ட போலிசார், சந்தீப்பை பிடிக்க முயன்றனர். அப்போது போலிஸாரையும் சந்தீப் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் சக போலீசார் படுகாயமடைந்தாலும், சந்தீப்பை கஷ்ட பட்டு கட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டனர். இதையடுத்து கீழே விழுந்த மருத்துவர் வந்தனாவை மீட்டு சோதனை செய்த போது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் பெண் மருத்துவர் வந்தனா கொலைக்கு ஞாயம் கேட்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று கூறி கேரள மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் அதிரடியாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவு தவிர அனைத்து பிரிவுகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருந்த பெண் மருத்துவரை குற்றவாளியான நோயாளியே கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ள சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here