சோனம் கபூர் உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா? வைரலாகும் பதிவு!!

249

சோனம் கபூர்..

சோனம் கபூர் சமீபத்தில் 20 கிலோ எடையைக் குறைத்ததை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் இப்போது கலக்கி வருவதே பிரபலங்களின் வாரிசுகளாக தான் இருகிறார்கள்.

அந்தவகையில் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக சோனம் கபூர் வலம்வந்துக்கொண்டிருக்கிறார். 2007ம் ஆண்டு Saawariya என்ற படத்தின் மூலம் தொடங்கிய இவரது பயணம் Delhi 6, I Hate Luv Storys என தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாகியவுடன்,

2018 ஆம் ஆண்டில் ஆனந்த என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு மகனும் உள்ளார். கர்பமாக இருக்கும் போதே உடல் எடையை அதிகமாக வைத்திருந்தார். குழந்தை பிறந்தவுடன் அது மீண்டும் அதிகரித்தது எனலாம்.எனவே கடுமையான டயட் இருந்து உடல் எடையை குறைத்துக்கொண்டுள்ளார். இவர் தனது உடல் எடையை குறைக்க யோகா உதவியதாம், தினமும் 40 நிமிடம் யோகா செய்வாராம்.


அதிகம் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார். தினமும் 3 வேளையும் பழங்கள் மற்றும் பழசாறுகள் சாப்பிட்டு வந்துள்ளார். அரிசி, பால், உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை உணவு பொருட்களை சாப்பிடுவதை நிறுத்திவிட்டாராம்.இரவு நேரத்தில் சூப் குடிப்பாராம், இது பசியை கட்டுப்படுத்துவதுமின்றி காலை வரை நல்ல ஆற்றலுடன் இருக்கி உதவுகிறது என கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது உடலமைப்பு புகைப்படத்தை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.சோனம் கபூர் சமீபத்தில் 20 கிலோ எடையைக் குறைத்ததை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் 20 கிலோ எடையை குறைத்துள்ளதாகவும், இன்னும் 6 கிலோ இருகிறது என கூறியுள்ளார். மேலும் இது கர்ப்பத்திற்குப் பிந்தைய உடல் மாற்றங்களின் சவால்களை எதிர்நோக்கும் புதிய தாய்மார்களுக்கு ஒரு முன்னுதரனமாக இருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.