டிக்டாக் மூலம் உளவு பார்கிறதா சீனா? டிரம்ப் அதிரடி நடவடிக்கை: வெளியான காரணம்!!

912

உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இந்த டிக்டாக் செயலி இருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிகாரிகள் கவலை தெரிவித்தை அடுத்து டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியை மோசமான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என சமீபத்திய வாரங்களில் அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் குற்றம்சாட்டினர். ஆனால் டிக்டாக் நிறுவனம் சீன அரசாங்கத்துடன் எந்த தொடர்பையும் மறுத்துள்ளது.

இந்நிலையில், டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தடை செய்கிறோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அவசரகால பொருளாதாரம் அல்லது நிர்வாக உத்தரவைப் பயன்படுத்தி சனிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறினார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் ஒப்பந்தங்களை விசாரிக்கும் அமெரிக்காவில் வெளிநாட்டு முதலீட்டுக்கான குழு (சி.எஃப்.ஐ.யு.எஸ்) மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து டிரம்பின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.