டியூஷனுக்கு வந்த மாணவனிடம் இரவு நேரங்களில் ஆபாச சாட்டிங்… ஆசிரியைக்கு நேர்ந்த பரிதாபம்!!

354

திருச்சியில்..

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு வயது 40. துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவர் உப்பிலியபுரத்தை சேர்ந்திருந்தாலும் பணி சூழல் காரணமாக துறையூர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவியும் அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்தே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேவி சில மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். அவரிடம் டியூசன் படித்த 10 ஆம் வகுப்பு மாணவரின் நடவடிக்கைகளில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவரின் செயல்பாடுகளை பெற்றோர் கவனிக்கவும் கண்காணிக்கவும் தொடங்கினர். அப்போது இரவு நேரங்களில் அந்த மாணவர், ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும் படிப்பில் கவனமில்லாததும் தெரியவந்தது.

இதனிடையே கடந்த மாதம 27ஆம் தேதி அன்று அந்த 16 வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து சிறுவனுடைய பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை மீது புகார் அளித்தனர். அதன் பேரில் முசிறி மகளிர் போலீஸார் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஆசிரியை திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவரை தவிர வேறு யாருடனாவது ஆசிரியை தேவி பாலியல் தொல்லையில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

மேலும் அந்த மாணவன்தான் தன்னிடம் பாலியல் ரீதியாக அணுகினான் என தேவி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனினும் தேவியிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அவரிடம் டியூசன் படித்து கொண்டிருந்த மாணவர்களிடமும் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here