டுவிட்டரை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டுமா?

828

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற பல நிறுவனங்கள் தமது சேவைகளை மக்களுக்கு இலவசமாகவே வழங்கி வருகின்றன.

இவை விளம்பரங்களை காட்சிப்படுத்துவதன் மூலமே அதிகளவு வருமானத்தினை ஈட்டி வருகின்றன.

எனினும் விளம்பரத்திற்கு மேலதிகமாக மாற்று வழியில் வருமானம் ஈட்டுவதற்கு டுவிட்டர் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இனிவரும் காலங்களில் டுவிட்டர் சேவையினை பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது உலகளவில் காணப்படும் கொரோனா தொற்று காரணமாக விளம்பர சேவைகளிலும் பல தடங்கல்கள் காணப்படுகின்றன.

இதனால் மேற்கண்ட நிறுவனங்களின் வருமானங்களில் வீழ்ச்சி நிலவுகின்றது.

இதனை சரிசெய்வதற்காக கட்டணம் செலுத்தி சேவையை பெறுமாறு பயனர்களிடம் டுவிட்டர் கோருவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன