தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக 9 கோடி நிதி திரட்டிய 5 வயது சிறுவன்!

831

இங்கிலாந்தில் 5 வயது சிறுவன் செயற்கைக் கால்கள் மூலம் நடைபயணம் மேற்கொண்டு, தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக இந்திய மதிப்பில் 9 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளார்.

குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்களால் இரு கால்களையும் இழந்த டோனியை, 2016 ஆம் ஆண்டு லண்டன் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து பவுலா ஹட்கெல் தம்பதியால் தத்தெடுத்தெடுக்கப்பட்டான்.

வளர்ப்பு பெற்றோர் உதவியுடன் தனது உடல் நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த டோனி, கடந்த பிப்ரவரி மாதம் செயற்கைக்கால்கள் மூலம் நடக்க தொடங்கினான்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

மேலும், டாம் மூர் என்ற 95 முதியவர், தனது தோட்டத்தில் நடைபயிற்சி சட்டகத்தைப் பயன்படுத்தி நடந்து 300 கோடி ரூபாய் திரட்டிய சாதனையால் ஈர்க்கப்பட்டு, 10 கிலோ மீட்டர் நடந்து இந்த நிதி திரட்டி உள்ளதாக கூறப்படுகின்றது.