தனியா இருக்கும் போது அது நடந்தால் தப்பு கிடையாது… வெளிப்படையாக பேசிய அபர்ணாதாஸ்!!

21

அபர்ணாதாஸ்….

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை அபர்ணா தாஸ்.

கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ் மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் பீஸ்ட் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார்.

ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், முதல்முறையாக கதாநாயகியாக அபர்ணா தாஸ் இப்படத்தில் நடித்து இருக்கிறார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இந்த நிலையில், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அபர்ணா தாஸ் டாடா படத்தில் ஒரு கெட்ட வார்த்தை இடம் பெற்று இருக்கும். அந்த வார்த்தை கேரளாவில் மோசமான வார்த்தை, நான் அந்த வார்த்தையை பேச மாட்டேன் என்று இயக்குனரிடம் கூறிவிட்டேன்.

நான் வேண்டுமானாலும் டம்மி வார்த்தை பேசி விடுகிறேன். அதற்கு, பீப் போட்டு விடுங்கள் என்று கூறினேன். கணவன் மனைவி தனியாக இருக்கும்போது, இந்த மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தலாம். பெரிய தவறாக ஒன்றும் தெரியாது என்று இயக்குனர் தெரிவித்தார். அதன் பின் அந்த காட்சியில் நடித்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.