தனுஷ் கூட அந்த படம் மாதிரி பண்ணனும்.. நடிகை பிரியங்கா மோகன் சொன்ன உண்மை!!

753

பிரியங்கா மோகன்…..

தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருந்து பாலிவுட் ஹாலிவுட் என்று தன் திறமையை வெளிக்கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி நடிகை பிரியங்கா மோகன் தனுஷ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், தனுஷ் பாடினா பிடிக்குமா? பாடல் வரிகள் பிடிக்குமா? என்றும் புதுப்பேட்டை மாதிரி ஆக்ஷன் படமா? காதல் கொண்டேன் மாதிரி காதல் படமா? என்று கேட்டுள்ளார்கள்.

அதற்கு பிரியங்கா மோகன், தனுஷ் சார் பாடினா இளையராஜா பாடுவது போல் இருக்கும் என்றும் கேப்டன் மில்லர் படம் ஆக்ஷன் படம் தான், தனுஷ் கூட காதல் கொண்டேன் படம் போல் பண்ணனும் என்று கூறியிருக்கிறார்.