தூத்துக்குடியில்..
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி அழகு ராணி (35). இவர் வீட்டின் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிந்துள்ளார்.
அப்பொழுது கட்டுவிரியன் பாம்பு ஒன்று அவரை கடித்த நிலையில், கூச்சலிட்டுள்ளார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு கணவர் சரணவன் வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனால் குறித்த பெண் பிளாஸ்டிக் பை ஒன்றில் அப்பாம்பை சடலமாக கொண்டு வந்துள்ளார். பாம்புடன் வந்த பெண்ணைப் பார்த்து பதறிய மருத்துவமனை ஊழியர்கள், பின்பு பாம்பு சடலமாக இருப்பதைக் கண்டு பெருமூச்சு விட்டுள்ளனர்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
தற்போது குறித்த பெண்ணிற்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.