தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமையா..? அதிரடி காட்டும் யோகி அரசு..!

1014

தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக 12 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வார தொடக்கத்தில் அசாம்கர் மாவட்டத்தில் சிக்கந்தர்பூர் அய்மா கிராமத்தில் முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இடையிலான மோதலைத் தொடர்ந்து நிலைமை பதட்டமானது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த சம்பவத்தை அறிந்து 12 பேரை கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒரு நபர் 12 மாதங்கள் வரை எந்தவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்படலாம் எனப்து குறிப்பிடத்தக்கது.


சிக்கந்தர்பூர் அய்மா கிராமம் வரும் மகாராஜ்கஞ்ச் காவல் நிலைய அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை கிராமத்து குழாய் அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்த சில சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

“தலித் வட்டாரத்தில் வசிப்பவர்கள் எதிர்த்தபோது, அவர்கள் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்கள் மற்றும் குச்சிகளால் தாக்கப்பட்டனர்” என்று அசாம்கர் காவல் கண்காணிப்பாளர் திரிவேணி சிங் கூறினார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 19 ஆண்கள் மற்றும் அடையாளம் தெரியாத ஏழு பேர் தலைமறைவாகியுள்ளனர்.

“இது நன்றாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் சகோதரிகள் மற்றும் மகள்கள் தொடர்பான வழக்குகளிலும் இதேபோன்ற நடவடிக்கை தொடங்கப்பட்டால் நல்லது. “என்று யோகியின் நடவடிக்கை குறித்து மாயாவதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“தலித் சிறுமியையோ அல்லது வேறு எந்த மதத்திலிருந்தும், சாதியிலிருந்தும் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது, அது அசாம்கர், கான்பூர் அல்லது வேறு எந்த மாவட்டத்திலிருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று அவர் மற்றொரு ட்வீட்டில் மேலும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 12 பேரில் அமர், ஃபயாஸ், அலி அகமது, முகமது அர்சலான், முகமது அர்ஷத், எஹ்சன், குர்ஷீத், நௌசத், லுக்மேன், ஆரிஃப், ஷாஹித் மற்றும் அக்ரம் ஆகியோர் அடங்குவர்.

காவல்துறை அதிகாரிகள் இதற்கு முன்னர் மற்றொரு பெயர்களின் பட்டியலையும் வழங்கியிருந்தனர்.

“அவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று சிங் மேலும் கூறினார்.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்த தகவல் அளித்தால் ரூ 25,000 ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.