தலைவலிக்காக மருத்துவமனை சென்ற போது… பிழைப்புக்காக வெளிநாடு சென்ற தமிழருக்கு நேர்ந்த துயரம்!!

687

தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடு சென்ற நிலையில் உயிரிழந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது மனைவி போராடி வருகிறார்.

கடலூரின் தொழுதூரை அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மனைவி அஞ்சலை, இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். கூலித் தொழிலாளியான பாலகிருஷ்ணனுக்கு துபாய் நிறுவனத்தில் கொத்தனாராக வேலை கிடைத்துள்ளது.

எனவே வேலைக்காக துபாய் சென்றவர், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் அங்கே மருத்துவரிடம் சோதனைக்காக சென்றுள்ளார்.

பாலகிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் கட்டி இருப்பதாக கூறியுள்ளனர், இந்நிலையில் அடுத்த சில நாட்களிலேயே வேலை செய்யும் இடத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

கீழே விழுந்ததில் பாலகிருஷ்ணன் கோமா நிலைக்கு சென்றுவிட, சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.

இத்தகவலறிந்து அஞ்சலை அதிர்ச்சியில் உறைந்து போனார், தன் கணவனின் முகத்தை கடைசியாக ஒருதடவையாவது பார்க்க வேண்டும் என கண்ணீர் விட்டு கதறும் அஞ்சலை அரசின் உதவியை நாடியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் பாலகிருஷ்ணனின் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here