தலை பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

1570

சென்னை….

சென்னை வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் கிழக்கு 16-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சகுந்தலா. இவர்களுடைய மகள் இந்துமதி (25).

இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சந்தோஷ் குமார் என்பவருடன் திருமணம் ஆனது. தற்போது 9 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்துமதி, வளைகாப்பு முடிந்து பிரசவத்துக்காக தனது தாய் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார்..

இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் கழிவறை சென்ற இந்துமதி, குழாயில் தண்ணீர் வரவில்லை என மோட்டாரை ஆன் செய்துள்ளார். அதன் நீண்ட நேரமாகியும் அவர் வராததால், சந்தேகமடைந்த அவரது தாய் சென்று பார்த்தபோது, இந்துமதி இறந்து கிடந்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் கதறி துடித்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இந்துமதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மின்மோட்டாரின் கீழ் பகுதியிலுள்ள வால்வு ஒன்றை திறக்க இந்துமதி முயன்றிருக்கலாம் என்றும் அப்போது மோட்டாரில் கசிந்த மின்சாரம் தாக்கி அவர் இறந்திருக்கலாம் என்றும் குடும்பத்தினர் கூறும் நிலையில் மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துமதி மோட்டார் சுவிட்ச்சை ஆன் செய்தபோது மின்சாரம் தாக்கி பலியானாரா? அல்லது கீழே இருந்த சுவிட்ச்சை போட குனிந்தபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர்,

மூச்சுத்திணறி மயங்கி விழுந்து இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்துமதிக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.