திடீரென இளைஞனின் பாண்ட் பாக்கெட்டில் இருந்து வெடித்து சிதறிய செல்போன்.. எச்சரிக்கை செய்தி!!

159

கேரளா…..

கேரளாவைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஹரிஸ் ரகுமான் (23), தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்தார். செல்போன் வெடித்து சிதறியதில் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. உடனடியான பேண்ட்டில் பிடித்த தீயை சமயோசிதமாக ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். இந்த விபத்தில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹரிஷ் ரகுமான், இந்த செல்போன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீக்காயமடைந்த நிலையில், ஹரிஷ் ரகுமான் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீரென பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் 8 வயது சிறுமி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்ததில் சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் விபத்துக்குள்ளாவது, உயிரிழப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

செல்போன் பழுதடைந்தால் தரம் குறைந்த டூப்ளிகேட் பொருட்களைப் பயன்படுத்தி பழுதை சரி செய்ய கூடாது. சார்ஜரில் செல்போனைப் போட்டுக் கொண்டே பேச கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here