திடீரென மணமகளுக்கு முத்தம் கொடுத்து கட்டியணைத்த நபர்!!

122

மணமேடையில் கனவுகளோடு வருங்கால மனைவியின் அருகில் கம்பீரமாக உட்கார்ந்திருந்து வாழ்த்த வந்திருக்கும் உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் மணமகனுக்கு திடீரென யாரோ ஒருவர் தனது அருகே அமர்ந்திருக்கும் மணமகளுக்கு முத்தம் கொடுத்து, கட்டியணைத்தால் எப்படியிருக்கும்?

கல்யாணம் தானே பதின்ம வயதிலிருந்து ஒவ்வொருத்தரின் கனவாக இருக்கிறது. வாழ்வின் அடித்த படிகளில் பயணிப்பதற்கான முதல் மாற்றமாகவும், தனக்கென ஒரு குடும்பம், எதிர்காலம் என யோசிக்க வைப்பதும் திருமண பந்தம் தானே? ஒரு நபரின் வாழ்க்கையில் மிகவும் பொக்கிஷமான நாட்களில் ஒன்று அவர்களின் திருமணம்.

விரிவான திட்டங்களைத் திட்டமிடுவதற்கும், அன்பானவர்களுக்கு அழைப்பிதழ்களை வழங்குவதற்கும், இந்த நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு ஒரு தனித்துவமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் உறவினர்கள் கடும் சிரமப்படுவார்கள்.

ஆனால் எப்போதாவது, திருமணங்களில் திட்டமிடப்படாத நிகழ்வுகள் ஒரு நீடித்த அசாம்பாவிதத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது அது போன்று ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அழகாக அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் மணமகனும், மணமகளும் ஒன்றாக அமர்ந்திருப்பதை இந்த வீடியோ காட்டுகிறது. அதில், ஒரு இளைஞன் மணமேடையில் ஏறி திடீரென நம்பமுடியாத வகையில் மணமகனுக்கு முன்பாகவே மணமகளுக்கு முத்தம் கொடுத்து கட்டிப் பிடிக்கிறார்.


இதைப் பார்த்த மணமகன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் அழத் தொடங்கும் முன், மணப்பெண்ணை மர்ம நபர் கட்டிப்பிடிக்கிறார். இந்த வீடியோவைப் பகிரும் பயனர்கள், இந்த வீடியோவிற்கு “கல்யாணம் ஏற்கனவே நடந்ததா?” “யார் இந்த நபர்?” என்று வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.