திருமணமான இன்னொரு பெண்ணுடன் காதல் வசப்பட்ட பெண் : கணவரும் ஆதரவளிக்கும் வினோதம்!!

989

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்து தமது கணவரை முதன் முதலில் சந்தித்துள்ளார் லியா ஹாமில்டன். திருமணத்திற்கு பின்னரும் ஒருதார மணம் இல்லாத உறவு முறையையே இந்த தம்பதி முன்னெடுத்து வந்துள்ளது.

இந்த நிலையில், இன்னொரு பெண்ணிடம் தமது மனதை பறிகொடுத்ததாக கூறும் லியா, தமது கணவரும் அந்த முடிவுக்கு ஆதரவளித்ததாக கூறியுள்ளார். தமது முன்னாள் காதலரை கரம் பிடித்து, பிள்ளைகளும் பெற்ற பின்னர் தான், பெண் ஒருவரை காதலித்தும் வந்துள்ளார் லியா.

உண்மையில் வெளிப்படையான உறவு முறையை தாம் கொஞ்ச காலத்திற்கு தள்ளிவைத்து விட்டு, தமது பிள்ளைகளை கவனிக்க தொடங்கியதாகவும், தமது கணவருக்கு பெர்லின் நகரில் வேலை கிடைத்து, அங்கே செல்லும் வரையில் தாம் கணவர் மற்றும் பிள்ளைகள் என வாழ்ந்து வந்ததாகவும் லியா தெரிவித்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆனால் ஜேர்மனியில், எல்லாம் தலைகீழாக மாறியது எனவும், அப்படியான ஒரு தருணத்தில் தமது மனதுக்கு பிடித்தமான பெண் ஒருவரை சந்தித்ததாக லியா குறிப்பிட்டுள்ளார்.

திருமணமான அந்த பெண்ணுடன் உடல் தேவைகளை கடந்து ஒரு உறவு உருவாகியுள்ளதை தாம் மிக விரைவில் உணர்ந்து கொண்டதாகவும் லியா தெரிவித்துள்ளார்.

முதலில் இந்த உறவினை தமது கணவர் ஏற்றுக்கொள்வாரா என்ற தயக்கம் இருந்ததாகவும், ஆனால் உண்மையில் தமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தமது கணவர் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் லியா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு ஆண்டுகள் லியா அந்த பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். இதன் பின்னர் தான் அவருக்கு தமது வாழ்க்கை இதுவல்ல என்பது தெரியவந்துள்ளது. மட்டுமின்றி இருவரும் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதால், அதுவே தங்கள் பிரிவுக்கும் காரணமாக அமைந்தது என்கிறார் லியா.

இருப்பினும், தமது அந்த மோசமான கட்டத்திலும் தமது கணவர் தமக்கு ஆதரவளிக்க மறுக்கவில்லை என்பதுடன், தமது மன நிலையை புரிந்துகொண்டு குடும்பத்திற்காக அதிக நேரம் செலவிடவும் செய்தார் என லியா குறிப்பிட்டுள்ளார்.