திருமணமான ஒரே மாதத்தில் கணவனை போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி!!

3063

மகாராஷ்ரா..

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் சுராஜ் ராஜேந்திரா. டேட்டா ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவருக்கும் அங்கிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து, இருவரும் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்துள்ளனர்.

அந்த வகையில் புனே புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் பிரதி ஷீர்டி கோவிலுக்கு சென்றனர். அப்போது, தங்களுக்கு சொந்தமான தோட்டம் இருப்பதாகவும், அங்கு சென்றுவிட்டு வீடு திரும்பலாம் என மனைவி அங்கிதா கூறியுள்ளார்.

மனைவி ஆசைப்பட்டதால் யோசிக்காமல் கொள்ளாமல் சரி என்று கணவர் கூறியுள்ளார். அடுத்த சில மணிநேரத்தில் அங்கிதாவின் தந்தைக்கு மகளிடமிருந்து அழைப்பு ஒன்று வந்தது. அப்போது, தோட்டத்தில் இருந்த தங்களை முகமூடி கொள்ளையர்கள் தாக்கியதாகவும் அதில் சுராஜ் உயிரிழந்ததாகவும் அங்கிதா கதறியபடி கூறியுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அங்கிதாவின் தந்தை தோட்ட வீட்டுக்கு சென்றார். இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கத்தி குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் அங்கிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக அங்கிதா பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, அங்கிதாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியபோது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

திருமணமான சில தினங்களிலேயே சுராஜை பிடிக்காமல் போனதாகவும், தன்னை சந்தேகப்பட்ட கணவனை கொன்று தீர்க்கும் வெறி வந்ததில், திட்டம்போட்டு சம்பவத்தை நிகழ்த்தியதாக கூறினார்.

இதனையடுத்து, அங்கிதாவை கைது செய்த போலீசார் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.