கேரளாவில் திருமணமான சில மாதங்களுக்குள் புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் Chennithala-வில் கடந்த செவ்வாய் கிழமை புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த 20 வயது பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Mavelikara-வில் உள்ள Thulasi Bhavan-ஐ சேர்ந்தவர் Devika Das. இவர் Pandalam-ன் Unamkotuvila-வை சேர்ந்த Jithin(30) என்பவரை திருமணம் செய்து Chennithala-வில் உள்ள மகாத்மா பள்ளி அருகே இருக்கும் வாடகை வீட்டில் ஒன்று வசித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதி கடந்த செவ்வாய் கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். Jithin தூக்கில் தொங்கிய நிலையில், Devika Das படுக்கையிலும் பிணமாக இறந்து கிடந்துள்ளார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...
Devika Das இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே Jithin-க்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அப்போது அவர் மைனர் என்பதால், Jithin மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனால் Devika Das அரசாங்கம் வழங்கிய இடத்தில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து இந்த தம்பதி கடந்த 6-ஆம் திகதி திருமணம் செய்து கொண்டதால், அதன் பின் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தான் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Jithin ஓவியர் என்பதால் போதுமான வருமானம் இல்லாததால், கடும் சிரமங்களை சந்தித்து வந்த இந்த தம்பதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் உயிரிழந்த Devika Das-க்கு கொரோனா இருப்பது உறுதி செய்பட்டுள்ளது,
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட 10 பொலிசார் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் இந்த சம்பவத்தை விசாரித்த பொலிசார் கொரோனா ஏதும் நமக்கு பரவியிருக்குமோ என்ற பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரின் கணவருக்கு நோய் தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.