திருமணமான பெண்ணுடன் தகாத உறவு.. இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

244

திருநெல்வேலியில்..

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியப்பன் (29). இவர் மும்பையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சந்திப்பு சி. என். கிராமம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அந்த பெண்ணை அவர் மும்பை அழைத்துச் சென்று அங்கு குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு அவர் ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க வெள்ளியப்பனை அந்த பெண்ணின் உறவினர்கள் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனிடையே சொந்த ஊரான குறிச்சி குளத்தில் சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழாவிற்காக வெள்ளியப்பன் வந்துள்ளார்.

அதனை எதிர்பார்த்து காத்திருந்த அந்த பெண்ணின் உறவினர் கும்பல் இன்று பட்டப் பகலில் குறிச்சிகுளம் – தாழையூட்டு சாலையில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்து அறிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கழுத்தில் பலமாக வெட்டு விழுந்ததால் வெள்ளியப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தாழையிட்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நபருடன் தவறான தொடர்பில் இருந்த பெண் யார்? அவரது உறவினர்கள் யார்? இந்த சம்பவத்தை அவர்கள் தான் செய்தார்களா? என்ற விரிவான விசாரணையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர்.

பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பிரதான சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.