திருமணமான பெண்ணை காட்டிற்கு அழைத்து சென்று இளைஞன் செய்த கொடூரம்!!

9734

கேரளாவில்..

கேரளாவில் அங்கமாலி, பரக்கடவு பகுதியைச் சேர்ந்த ஆதிரா என்பவர் மாயமானதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து போலீசர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இடுக்கி மாவட்டம் வெள்ளத்தூவலைச் சேர்ந்த அவரது நண்பரான அகில் பி பாலச்சந்திரன் என்பவர் செய்யப்பட்டார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தும்பூர்முழியில் சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் சால்வையால் கழுத்தை நெரித்து ஆதிராவின் கொன்றுவிட்டு பாறைகளுக்கு இடையே உடலை வீசியதை அகில் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.

அகில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை காலை குற்றம் நடந்த இடத்திற்குச் சென்ற போலீஸார் சடலத்தைக் கண்டெடுத்தனர். அகில் அங்கே உள்ளூரில் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.


அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ‘அகிலேட்டன்’ என்ற ஐடியில் ரீல்களை பதிவிட்டு டிரெண்டிங் ஆனவர். உள்ளூரில் அவர் பிரபலமானவராகவே இருந்தார். அகிலுக்கும் ஆதிராவுக்கும் இடையே இருந்த திருமணத்திற்குப் புறம்பான உறவே கொலைக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கடந்த ஆறு மாதங்களாக இருவரும் உறவில் இருந்ததாக அகில் போலீசாரிடம் தெரிவித்தார். இருவரும் அங்கமாலியில் உள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் திருமணமாகி தங்கள் குழந்தை மற்றும் குடும்பத்துடன் தான் வசித்து வந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், “ஆதிராவின் 12 சவரன் நகைகளை அடகு வைத்து அகில் கடன் வாங்கியுள்ளார். நகைகள் இல்லாமல் இருப்பது குறித்து ஒரு கட்டத்தில் ஆதிராவின் கணவர் அவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆதிரா அகிலிடம் தங்கத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கியுள்ளார்.

சீக்கிரம் தருகிறேன் என்றே சொல்லி ஆதிராவிடம் அகில் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆதிரா விடாப்பிடியாக நகையைக் கேட்கத் தொடங்கியுள்ளார். இதன் காரணமாகவே ஆதிராவை அகில் கொலை செய்துள்ளான்.

கடந்த 29ம் தேதி முதல் தனது மனைவியைக் காணவில்லை என ஆதிராவின் கணவர் சனல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​அகிலுடன் ஆதிராவும் காரில் ஏறியது தெரியவந்தது.

கார் எண்ணை வைத்து வாகனத்தின் உரிமையாளரை போலீசார் அழைத்தபோது, ​​அது கால் டாக்ஸி என்பது தெரிய வந்தது. மேலும், அந்த வாகனத்தை அப்போது அகில் வாடகைக்கு எடுத்திருந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அகிலிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இருப்பினும், அகில் முதலில் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். எத்தனை முறை கேள்வி கேட்டாலும் அவர் இதற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றே திரும்பத் திரும்ப சொல்லி வந்தார்.

தனக்கும் ஆதிராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே கூறி வந்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே நடந்த தொலைப்பேசி அழைப்புகள் குறித்த விவரங்களைப் பெற்ற போலீசார் அகிலிடம் விசாரணை தீவிரப்படுத்தினர். போலீசாரிடம் அனைத்து ஆதாரங்களும் இருப்பதை உணர்ந்த அகில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சூப்பர் மார்க்கெட்டில் லீவ் எடுத்துவிட்டு வெளியே சுற்றலாம் என்று வற்புறுத்தி ஆதிராவை அகில் லீவ் எடுக்க வைத்துள்ளார். மாலைக்குள் திரும்பிவிடலாம் என்று சொல்லி வாடகை காரில் ஆதிராவை அகில் அதிரப்பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் மொபைலை எடுத்து வர வேண்டாம் என்றும் ஆதிராவிடம் அகில் வலியுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலத்தில் தும்பூர்முழி என்ற இடத்திற்கு வந்த போது பேச வேண்டும் என சொல்லி ஆதிராவை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அகில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஆதிராவை அவரது சால்வையாலேயே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆதிரா கீழே விழுந்த போது, தனது பூட் கால் மூலமும் அந்த கொடூரன் கழுத்தை நெறித்துள்ளான். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது