திருமணம் நிச்சயமான காதல் ஜோடி ஹோட்டல் அறைக்குள் எடுத்த விபரீத முடிவு!!

921

மத்திய பிரதேசத்தில்..

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமனம் செய்து வைப்பதற்கு நிச்சயம் எல்லாம் செய்த நிலையில், காதல் ஜோடி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஹோட்டலிலேயே அறையில் விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், போலீசார் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடிகள் இருவரின் செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தும், இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் தெரியாமல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23).

இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் என கூறி விட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார். ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த நிஷா தெரிவித்து உள்ளார். அவரும் விஷம் குடித்திருக்கிறார். தங்களை காப்பாற்றும்படியும் அவர் கோரியுள்ளார்.

அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்து உள்ளனர். ஆனால், எந்த ஓட்டல் என தெரியாமல் கபிலின் உறவினர்கள் பல இடங்களில் தேடி மாலையில் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஓட்டல் பணியாளர்கள் உதவியுடன் மாற்று சாவி அறையை உடைத்து உள்ளே சென்ற போது, கபில், நிஷா இருவரும் சுயநினைவற்று கிடந்து உள்ளனர். அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அதில் பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். பொதுவாக, திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இது போன்ற தற்கொலை முடிவை காதல் ஜோடிகள் எடுப்பது வழக்கம்.

ஆனால், திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here