திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளம் தம்பதி! அதை வைத்து நெட்டிசன்கள் செய்த செயல்: கிடைத்த பதிலடி!!

771

இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் அர்னேஷ் மித்ரா. இவரும் எக்தா பட்டாச்சார்யா என்பவரும் பள்ளி பருத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். அதன் பின் இருவரும் பட்டப் படிப்பை முடித்த நிலையில், இருவரின் வீட்டிலும் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இந்த ஜோடி தங்களின் புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட, அதை நெட்டிசன்கள் கிண்டல் செய்ய துவங்கினர்

ஏனெனில், குறித்த புகைப்படத்தில், மணமகன் அர்னேஷ் மித்ரா உடல் பருமனுடன் இருப்பதை கண்டு பலரும் கிண்டல் செய்தனர்.

அதே போல், இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று மீம்ஸ்களை பறக்கவிட்டனர். ஒருசிலர் மட்டுமே இதனை தவறு என கண்டித்தனர்.

11 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் புகைப்படம் இப்படி கிண்டல் செய்யப்படும் மீம்ஸ்கள் எக்தா கவனத்துக்கு செல்ல அவர் மிகவும் கோபமடைந்து குறிப்பிட்ட அந்த மீம்ஸ் பேஜ் மீது புகாரளிக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால், அர்னேஷ் மித்ராவோ புகார் எதுவும் அளிக்க வேண்டாம். எனக்கு கிடைத்ததை போல அழகான மனைவி அவர்களுக்கு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் தான் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எக்தா, நான் அவரை காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் இது போன்ற கேலியும் கிண்டல்களும் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஒருவரின் உடலை பார்க்கும் இந்த சமூகம், அவரது மனதை பார்க்க தவறி விடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல அர்னேஷ் மித்ராவும் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்த புகைப்படத்தை கிண்டல் செய்த அனைவருக்கும் நன்றி.

இவ்வளவு அழகான பெண் என்னுடைய மனைவி என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. அவர் குழந்தை பருவத்திலிருந்தே என்னுடைய தோழி, இப்போது என்னுடைய மனைவி என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here