துடிதுடித்து பலியான பள்ளி மாணவி.. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

358

தஞ்சாவூரில்..

தஞ்சாவூர் அய்யம்பேட்டை கண்டக்கரயம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் செந்தில்குமார் பத்மா தம்பதியினர். இவர்களின் மூத்த மகள் சுஷ்மிதா .

கணபதி அக்ரஹாரம் தட்டாரத் தெருவில் வசித்து வருஅப்வர் கந்தன் மகள் ராஜேஸ்வரி. இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே உள்ள கேப்ரியேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இப்பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அந்த சமயத்தில் பள்ளிக்கூடம் முடிந்து சுஷ்மிதாவும், ராஜேஸ்வரியும் வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.

அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதில் 2 மாணவிகளும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இருவரையும் மீட்டு உடனடியாக பள்ளி நிர்வாகிகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுஷ்மிதா வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ராஜேஸ்வரியை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

உயிரிழந்த மாணவிக்கு நிவாரணம் வழங்க கோரி சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவியின் உயிரிழப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் மாணவியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கல்கள் . அத்துடன் ரூ5 லட்சம் நிவாரணம் வழங்கப்படுமெனவும் படுகாயம் அடைந்த மாணவிக்கு ரூ ஒரு லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.