துடி துடித்து உயிரிழந்த நடிகர் சுஷாந்த்தின் கடைசிப் படத்தின் டிரெய்லர்! படத்திலும் இப்படி ஒரு நிலையா? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

841

நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் அவர் குறித்த நினைவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர அது வைரலாகி வந்தது.

இந்நிலையில் அவரது இறுதிப்படமான ‘தில் பேச்சரா’ (Dil Bechara) படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் The Fault in our Stars என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு வருகிறது.

இந்த நாவல் ஏற்கனவே அதே பெயரில் ஹாலிவுட்டில் படமாக வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுஷாந்த்தின் இறுதிப்படமான ‘தில் பேச்சரா’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வருகிற ஜூலை 24 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.