நடிகர் ஆர்யாவின் திரைப்படம் OTT யில் ரிலீஸ்! வெளியான சூப்பர் தகவல்..!

786

கொரோனா வைரஸ் தோற்று மிக வேகமாக பரவி வருவதால், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பல மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, மேலும் இதன் காரணமாக திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷின் பெண்குயின் மற்றும் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT யில் வெளியானது, மேலும் லாக்அப், டேனி போன்ற திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

இந்நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள டெடி திரைப்படத்தை OTT யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.