நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஷகிலாவை மோசமாக தாக்கிய அவரது மகள்!!

164

ஷகிலா..

பிரபல நடிகை ஷகிலாவை அவரது மகள் தாக்கிய சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஷகிலா, அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக இருக்கும் போதே தன் பொறுப்பில் எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்திருக்கிறார்.

இந்நிலையில் ஷீத்தல் மற்றும் அவரது வளர்ப்பு தாயான ஷகிலா ஆகிய இருவரின் குடும்பத்தினிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷகிலாவின் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் அங்கு இருந்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஷகிலாவுடன் இருந்த வக்கீல் சவுந்தர்யாவையும் தாக்கி உள்ளனர்.


இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஷீத்தல் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை தற்போது நடந்து வருகிறது.