நள்ளிரவு பார்ட்டியில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை.. கதறித் துடிக்கும் பெற்றோர்!!

320

உத்தரப்பிரதேசத்தில்..

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைந்துள்ளது பாபு பனாரசி தாஸ் கல்லூரி . இந்த கல்லூரியில் நிஷ்தா திரிபாதி என்ற மாணவி பி.காம் ஹானர்ஸ் படித்து வந்தார்.

அவர் தனது நண்பருடன் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார். அவரது நண்பர் ஆதித்யா பதக் நிஷ்தாவை லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள தயாள் ரெசிடென்சிக்கு அழைத்து சென்றார்.

ஆதித்யாவின் நண்பர்கள் பலர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் மதுவும் பரிமாறப்பட்டுள்ளது. விடிய, விடிய நடந்த பார்ட்டியில் திடீரென அதிகாலை 3.30 மணிக்கு தயாள் ரெசிடென்சியில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

நிஷ்தா திரிபாதி துப்பாக்கியால் சுடப்பட்டு சரிந்து விழுந்தார். உடனடியாக ஹோட்டல் நிர்வாகம் மற்றும் நண்பர்களால் லோஹியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்...

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நிஷ்தா பரிதாபமாக உயிரிழந்தார். அவரை அழைத்து சென்ற ஆதித்யா பதக் மீது குற்றம் சாட்டப்பட்டு அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதே நேரத்தில் பார்ட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்களிடம் நிஷ்தா சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விடுத்த செய்திக்குறிப்பில்

” நிஷ்தா சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஆதித்யா பதக் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதற்காக அவர் நிஷ்தாவை சுட்டார் என்பது குறித்து அறையில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளார். இரவு நேர பார்ட்டியில் கல்லூரி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.