நாற்காலியில் கட்டிவைத்து இளம் ஆசிரியை கொடூர கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

190

பெங்களூருவில் இளம் நடன ஆசிரியை, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டான்ஸ் டீச்சர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடன ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி உபநகராவில் உள்ள குடியிருப்பில், 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் தனது கணவருடன் வசித்து வந்தார். கார் ஓட்டுநரான கிரண் என்பவருடன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. நவ்யஸ்ரீ அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடன ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி இரவில் நவ்யஸ்ரீ, அவரின் தோழி ஐஸ்வர்யாவுடன் தனது வீட்டில் தூங்கியுள்ளார். புதன்கிழமை காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது, பக்கத்து அறையில் நவ்யஸ்ரீ, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நவ்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அண்மைக் காலமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி மோதல் வெடித்தது தெரியவந்தது.

இதனால், விரக்தியடைந்த டான்ஸ் டீச்சர், கடந்த செவ்வாய்க்கிழமை தனது நண்பர்கள் ஐஸ்வர்யா மற்றும் அனில் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அப்போது, கணவர் கரண் கொடுக்கும் தொல்லையால், தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அவர்களிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிச்சியடைந்த நண்பர், போலீசில் புகார் அளிக்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளார்.


பின்னர், இரவு 11 மணியளவில் நவ்யஸ்ரீ உடன் அவரின் தோழி ஐஸ்வர்யாவையும் வீட்டில் இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார் அனில். வீட்டிற்கு சென்ற பின் ஐஸ்வர்யா, மது அருந்திவிட்டு ஆழ்ந்து தூங்கியதாக கூறப்படுகிறது. புதன்கிழமை அதிகாலை எழுந்து பார்த்தபோது, நவ்யஸ்ரீ சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

நாற்காலியில் கட்டிவைத்து கொடுமைப்படுத்தி, கழுத்து அறுக்கப்பட்டும், கழுத்தை நெரித்தும் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. நவ்யஸ்ரீயின் கணவர் கரண், மாற்று சாவி மூலம் வீட்டை திறந்து தனது மனைவியை கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், நவ்யஸ்ரீ கொலை செய்யப்பட்டதற்கு குடும்ப பிரச்சினை தான் காரணமா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த டான்ஸ் டீச்சர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.