கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாத்ரூமில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பாலக்காடு பட்டாம்பியில் உள்ள நிதி நிறுவனத்தின் பாத்ரூமில் இளம்பெண் ஷீதா(27) எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பாலக்காரு ஓங்கல்லூர் வடநாம்குருச்சியைச் சேர்ந்தவர் ஷீதா (27) என்பதும், அந்நிதி நிறுவனத்தில் ஷீதா ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
ஷீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். ஷீதா தற்கொலைச் செய்துக் கொண்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.