நித்திரைக்குச் சென்ற இளைஞன் காலையில் சடலமாக மீட்பு!

720

வவுனியா வேப்பங்குளம் பகுதியிலிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று (02) காலை இளைஞரின் சடலமொன்றினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வீட்டில் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தாயார் எழுப்பிய போது இளைஞன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து தயார் அயலவர்களுக்கு தகவலை வழங்கியுள்ளார். அயலவர்கள் குறித்த சம்பவத்தினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்த இராஜேந்திரன் விமலராஜ் (27வயது) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here