நீண்ட 24 ஆண்டுகள்… காதலனை வெட்டி நொறுக்கிவிட்டு மாயமான பெண் மருத்துவர் எங்கே? வெளிவரும் பகீர் பின்னணி!!

830

இந்தியாவின் கேரள மாநிலத்தை உலுக்கிய சூட்கேஸ் கொலை தொடர்பில் நீண்ட 24 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் பெண் மருத்துவர் குறித்த மர்ம நீடித்து வருகிறது.

கேரள மாநிலத்தில் பய்யனூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த 42 வயது முரளீதரன் என்பவரையே காதலியான மருத்துவர் ஓமனா தமிழகத்தின் ஊட்டியில் வைத்து கொலை செய்தார்.

1996 ஜூலை 11 ஆம் திகதி நடந்த இச்சம்பவம் தொடர்பில் கைதான மருத்துவர் ஓமனா 2001 ஆம் ஆண்டு பிணையில் வெளிவந்தார். ஆனால் அதன் பின்னர் சர்வதேச பொலிசார் முயன்றும் அவர் எங்கே என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

மருத்துவர் ஓமனா தற்போது மலேசியாவில் புது பெயர் மற்றும் அடையாளங்களுடன் வசித்து வருவதாகவும், அவர் இறந்து விட்டார் எனவும் இருவேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது.


ஜூலை 11 ஆம் திகதி ஊட்டியில் வைத்து காதலனை கொடூரமாக கொலை செய்து, உடல் பாகங்களை வெட்டி நொறுக்கி ஒரு சூட்கேஸில் நிரப்பி, கொடைக்கனால் வழியாக கன்னியாகுமரி நோக்கி காரில் சென்ற மருத்துவர் ஓமனாவை திண்டுகல் அருகாமையில் வைத்து தமிழக பொலிசார் கைது செய்தனர்.

கொல்லப்பட்ட முரளீதரன் திருமணம் செய்து கொள்ள தம்மை தொடர்ந்து நச்சரித்து வந்ததாலையே, அவரை கொலை செய்ததாக ஓமனா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். மலேசியாவில் மருத்துவராக பணியாற்றி வந்த ஓமனா, கொலை நடப்பதற்கும் ஒரு வாரம் முன்னர் கேரளா வந்துள்ளார்.

பின்னர் தொலைபேசி மூலம் முரளீதரனை தொடர்புகொண்டு, இருவரும் ஒன்றாக ஊட்டிக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே திருமணமான ஓமனா, முரளீதரனின் தொடர் திருமண கோரிக்கையை நிராகரித்தே வந்துள்ளார்.

இதனிடையே, முரளீதரன் தமக்கும் ஓமனாவுக்கும் இருக்கும் உறவை அம்பலப்படுத்தவே, ஓமனாவின் கணவர் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். கொலை நடப்பதற்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா சென்ற ஓமனா அங்கேயே மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால் முரளீதரன், மலேசியாவுக்கும் சென்று தம்மை திருமணம் செய்து கொள்ள நிர்பந்தித்துள்ளார். ஒருகட்டத்தில் முரளீதரனுக்கு சம்மதம் தெரிவித்த ஓமனா, கேரளாவில் வந்த பின்னர் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து கொலை செய்யும் திட்டத்துடன் கேரளா வந்த ஓமனா, முரளீதரனுடன் ஊட்டிக்கு சென்றுள்ளார்.

தனியார் ஹொட்டல் மற்றும் ரயில்வே தங்கும் விடுதிகளிலும், இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனிடையே, ஒருநாள் முரளீதரனின் உணவில் விஷம் கலந்து, இறந்ததாக உறுதி செய்த பின்னர், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி நொறுக்கி 3 சூட்கேஸ்களில் நிரப்பியுள்ளார். கன்னியாகுமரி செல்லும் வழியில், காரில் இருந்து கெட்ட வாசனை வருவதாக சாரதி கூறவே, அங்கிருந்து தப்பிய ஓமனாவை சில மணி நேர தேடலுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

2001 ஜனவரி 29 வரை தமிழக சிறையில் இருந்த மருத்துவர் ஓமனா, பின்னர் பிணையில் வெளிவந்து, அதன் பின்னர் மாயமானார். முரளீதரனை ஓமனா மருத்துவ முறைப்படியே, கொலை செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கட்டிடக்கலை நிபுணரான முரளீதரன், பலமுறை தம்மை துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஓமானா தொடர்பில் பொய்யான தகவலை பரப்பியுள்ளார். தொடர்ந்து கணவரும் பிரிந்து செல்லவே, காதலனிடம் இருந்து தப்பவே ஓமனா மலேசியாவுக்கு சென்றுள்ளார்.

ஆனால் மலேசியாவில் தொடர்ந்து சென்ற முரளீதரன், ஓமனாவுக்கு உளவியல் பிரச்சனை இருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் வேலை பறிபோன ஓமனா, முரளீதரனை கொலை செய்ய திட்டமிட்டதாக பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.