நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் காதலி எடுத்த விபரீத முடிவு!!

12810

கேரளாவில்..

கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் கடுதுருத்தி அடுத்த கொத்தநல்லூரை சேர்ந்தவர் அருண் வித்யாதர். 26 வயதான இந்த வாலிபர் , தான் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்து உள்ளார்கள். அப்போது பல நேரங்களில் இருவரும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் இதை காதலிக்குத் தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து வைத்திருக்கிறார்.

காதலன் நடவடிக்கையில் திடீரென்று மாற்றம் காண, காதலன் நடவடிக்கை பிடிக்காமல் போக அவருடன் பழகுவதை தவிர்த்து இருக்கிறார் அந்த இளம் பெண். இதனால் ஆத்திரம் கொண்ட வித்தியாதர், காதலியை செல்போனில் தொடர்பு கொண்டு,

என்னுடன் எப்போதும் போல் பேச வேண்டும் பழக வேண்டும் இல்லையென்றால் நெருக்கமாக இருந்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த இளம் பெண், தன்னுடன் நெருக்கமாக இருந்தபோது இப்படி ஒரு செயலை செய்திருக்கிறானே காதலன் என்று அதிர்ந்து போய் ஏப்ரல் 30ஆம் தேதி அன்று கடுதுருத்தி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார் .

புகார் அளித்ததும் மேலும் ஆத்திரமாகி இருக்கிறார் வித்யாதர். உடனே நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக விரட்டி வந்தவர், பேஸ்புக்கில் வெளியிட்டே விட்டார்.

அது மட்டுமல்லாமல் காதலியின் சகோதரி கணவரான ஐஏஎஸ் அதிகாரியின் புகைப்படங்களையும் பதிவிட்டு, தான் கைது செய்யப்பட்டால் அதற்கு இவர் தான் பொறுப்பு என்றும் பதிவிட்டு இருக்கிறார்.

இது குடும்பத்திற்குள் பெரும் பிரச்சனையாகி வெடிக்க, அதில் அதிகம் மனம் உடைந்த அந்த இளம் பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதில் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் பெற்றோர் கடுதுருத்தி காவல் நிலையத்தில் வித்தியாதர் மீது புகார் அளித்திருக்கிறார்கள்.

தங்களின் மகளின் மரணத்திற்கு காரணம் வித்தியாதர்தான் என்று கூறியிருக்கிறார்கள். புகாரின் பேரில் அருண் வித்யாதர் மீது இந்திய தண்டனைச் சட்டம், தற்கொலைக்கு தூண்டுதல், கேரள காவல் சட்டம் ஆகியவற்றில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னை கைது செய்ய போலீசார் தேடி வருவதை அறிந்ததும் வித்தியாதர் தலைமறைவாகி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here