பச்சிளம் குழந்தை மர்ம மரணம்.. வெளிவந்த எதிர்பாராத ட்விஸ்ட்.. லிவிங் டூ கெதர் ஜோடி போட்ட திட்டம்!!

255

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே உள்ள காரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (34).இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் நம்பூரணிப்பட்டியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 8 மாதங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோகன்ராஜை பிரிந்தார் நிவேதா.

அவருக்கு ஒரு மகள் உள்ளார். நிவேதா தற்போது சென்னை மணலியில் வசித்து வருகிறார். அவரது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஓராண்டுக்கு முன் அறந்தாங்கி அருகே வைரவயல் கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா (எ) செண்பகவள்ளி (26) என்பவருடன் மோகன்ராஜ் ஒன்றாக வசித்து வந்தார்.

இவர்களுக்கு கடந்த 32 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி மோகன்ராஜ் தனது வீட்டு முற்றத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.


கிருத்திகா வீட்டிற்குள் உள்ள கழிவறைக்கு சென்றிருந்தார். குழந்தை அறையில் உள்ள தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. கிருத்திகா வந்து பார்த்தபோது தொட்டிலில் இருந்த குழந்தையை காணவில்லை. கணவனை எழுப்பி சொன்னாள்.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை விழுந்து இருந்தது. இதையடுத்து, உடனடியாக குழந்தையை மோகன்ராஜ் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜ், கிருத்திகாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது குழந்தையை கொன்றதாக கிருத்திகா வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசில் கிருத்திகா அளித்த வாக்குமூலம்: மோகன்ராஜ் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் என்னுடன் வசித்து வந்தார்.

எங்களுக்கு குழந்தை இருப்பதால் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் வேறு பெண்ணுடன் குழந்தை பெற்றதால் சிறைக்கு செல்ல நேரிடும் என மோகன்ராஜ் கூறினார். இதையடுத்து குழந்தையை கொல்ல முடிவு செய்தோம். அதன்படி மோகன்ராஜ் குழந்தையை கழுத்தை நெரித்து என்னிடம் கொடுத்தார்.

மேலே சென்று குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டேன். அப்போது குழந்தையை யாரோ கொன்று விட்டதாக நாடகமாடினோம். இவ்வாறு கிருத்திகா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.