பணத்தை கொடுங்க என்னவேனாலும் பண்றேன்… அந்த மாதிரி நடிக்க தாராளம் காட்டிய ரெஜினா!!

346

ரெஜினா கசாண்ட்ரா…

சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா வாழ்க்கை துவங்கிவிட்டது. அதன் பின்னர் பல்வேறு குறும்படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டார்.

அதில் பேமஸ் ஆன ஒன்று பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம். அந்த ஷார்ட் பிலிமில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.


அதனால் எந்த மாதிரியான ரோல் கிடைத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஓரினசேர்க்கையாளராக நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். அந்த படத்தில் நடிக்க மற்ற நடிகைகள் தயங்கியபோது ரெஜினா மூன்று மடங்கு சம்பளத்தை ஏற்றி கேட்டாராம். அதற்கு உடனே தயாரிப்பு தரப்பு ஓகே சொல்ல லெஸ்பியனாக நடிக்க தெரியாதபோதும் பணத்திற்காக பல டேக்குகள் எடுத்து நடித்தாராம். காரணம் அவருக்கு இப்போதைக்கு படவாய்ப்புகள் இல்லை என்பதால் கிடைச்சது விடக்கூடாது என்று நடித்து வருகிறார்.